வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த பிட்ஸ்பர்க் அறிவியலாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். எலிகள் மீது பரிசோதனை செய்யப்பட்ட இம்மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா, இதுவரை 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் 10.54 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட, 55,711 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,23,784 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நிலைமையை சமாளிக்க, பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.
இந்நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசன் அறிவித்துள்ளது. தங்கள் கண்டுபிடித்த மருந்துக்கு 'பிட்கோவேக்' எனப் பெயரிட்டுள்ள அதன் அறிவியலாளர்கள், எலிகளுக்கு இம்மருந்தை பரிசோதித்துள்ளனர். இரு வாரங்களிலேயே அதிகப்படியான எதிர்ப்பு சக்தியை எலிகள் பெற்றுள்ளதும், கொரோனாவை எதிர்த்து அழிக்கும் ஆற்றலை எலிகளுக்கு செலுத்தப்பட்ட இந்த மருந்தின் அளவே பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த அமெரிக்கா!